டெல்லி

டெல்லி முதல்வர் அதிஷி ராமருடைய செருப்பை வைத்து பரதன் ஆண்டது போல் தாம் கெஜ்ரிவாலுக்கு பதிலாக ஆட்சிசெய்வதாக தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் இரு வழக்கிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லியின் புதிய முதல் மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்  இன்று முதல்-மந்திரியாக அதிஷி பொறுப்பேற்றுக்கொண்டார்.

டெல்லி முதல்வர் அதிஷி தனது எக்ஸ் தளத்தில,

”டெல்லி முதவராக நான் பொறுப்பேற்றுள்ளேன். தனது சகோதரர் ராமர் வனவாசத்திற்கு சென்றபோது எந்த வலியுடன் பரதன் அயோத்தியை ஆட்சி செய்தானோ, அதே வலியுடன் டெல்லியின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளேன்.

ராமரின் செருப்பை வைத்து எப்படி பரதன் 14 ஆண்டுகள் அயோத்தியை ஆட்சி செய்தானோ, அதேபோல டெல்லியில் கெஜ்ரிவாலுக்க் பதிலாக நான் 4 மாதங்கள் ஆட்சி செய்வேன்.”

என்று தெரிவித்துள்ளார்.