டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்2020 போட்டி இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர்களுடன் சுமார் 200 பேர் கொண்ட வீரர்கள் குழு டோக்கியோ செல்ல உள்ளது.

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில்,  தடகளப் போட்டிகள் ஜூலை 31 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைfளை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வீரர்கள்

அவினாஷ் சேபிள், எம்.பி. ஜபீர் (400 மீ தடை ஓட்டம்),

எம். ஸ்ரீஷங்கர் (நீளம் தாண்டுதல்),

தாஜிந்தர்பால் சிங் டூர் (குண்டு எறிதல்),

நீரஜ் சோப்ரா மற்றும் சிவ்பால் சிங் (ஈட்டி எறிதல்),

கே.டி. இர்பான், சந்தீப் குமார் மற்றும் ராகுல் ரோஹில்லா (20 கி.மீ. நடை பந்தயம்)

குர்பிரீத் சிங் (50 கி.மீ. நடை பந்தயம்),

அமோஜ் ஜேக்கப், அரோக்கியா ராஜீவ், முகமது அனஸ், நாகநாதன் பாண்டி (4*400 தொடர் ஓட்டம்),

நோவா நிர்மல் டாம், சர்தக் பாம்ப்ரி, அலெக்ஸ் ஆண்டனி (கலப்பு தொடர் ஓட்டம்).

வீராங்கனைகள்

டூட்டி சந்த் (100 மீ மற்றும் 200 மீ ஓட்டம்);

கமல்பிரீத் கவுர் மற்றும் சீமா ஆன்டில்-புனியா (வட்டு எறிதல்)

அன்னு ராணி, பாவ்னா ஜாட் மற்றும் பிரியங்கா கோஸ்வாமி (20 கி.மீ. நடை)

ரேவதி வீராமணி, சுபா வெங்கடேசன், தன்லட்சுமி சேகர் (கலப்பு தொடர் ஓட்டம்).

இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில் ஜே சுமாரிவாலா (Adille J. Sumariwalla) விடுத்துள்ள செய்திக்குறிப்பபில், ஒலிம்பிக் போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய தடகள அணி  ஒரு சிறந்த அணி என்றும், வீரர்-வீராங்கனைகள் மனதளவிலும், உடலளவிலும் நல்ல முறையில் உள்ளனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் மற்ற நாட்டு போட்டியாளர்களுக்கு  சவாலாக விளங்குவார்கள் என்று தெரிவித்து உள்ளார்.