திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவராத்திரயை முன்னிட்டு தீபம் ஏற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சிவராத்திரியை முன்னிட்டு லட்சதீபம் மற்றும் உப்பு கோலங்களில் தீபம் ஏற்றுவது வழக்கம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து திருவண்ணாமலை கோயிலில் தீபம் ஏற்ற அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் தீபம் ஏற்ற தடை விதித்திருப்பது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel