டெல்லி: நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: நாடு முழுவதும் 63 மாவட்டங்கள் ரத்த வங்கிகள் இல்லாமல் உள்ளது. 11 மாநிலங்களில் 63 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் கிடையாது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 14 மாவட்டங்களிலும், அசாம் மாநிலத்தில் 5 மாவட்டங்களிலும், ரத்த வங்கிகள் கிடையாது. மணிப்பூர் மாநிலத்தில் 12 மாவட்டங்களிலும், மேகாலயா மாநிலத்தில் 7 மாவட்டங்களிலும், நாகலாந்தில் 9 மாவட்டங்களிலும் ரத்த வங்கிகள் இல்லை.
பீகார் மாநிலத்தில் 5 மாவட்டங்களிலும், சத்தீஸ்கர், அரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 1 மாவட்டத்திலும், குஜராத், மத்திய பிரதேசம் ஆகீய மாநிலங்களில் தலா 2 மாவட்டங்களிலும் ரத்த வங்கிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.