மெக்கா: சவூதி அரேபியால் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மெக்காவுக்கு ஹஜ் பயணம் சென்று பயணிகள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக, இதுவரை 550 ஹஜ் யாத்ரிகள் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும். ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் கடும் வெப்பம் நிலவி வரகிறது. மேலும், வெப்ப அலை மற்றும் வெப்பக் காற்று காரணமாக, ஹஜ் யாத்ரிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெப்ப அலை காரணமாக, ஹஜ்-க்கு புனித பயணம் மேற்கொண்டவர்களில், இதுவரை 550 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் எகிப்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 323 பேர் எகிப்தியர்கள். மேலும், 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் வெப்ப அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றனர் என்றும் எனவே, பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]