வூதியில் நிலவும் கடும் வெப்ப அலைக்கு இதவரை 19 பேர்  ஹஜ் பயணிகள் பலியாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறையினர் அறிவித்து உள்ளனர். மேலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் உலகின் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாகும்.  இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் சவூதியில் குழுமி உள்ளனர். இந்த  ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரை வெள்ளிக்கிழமை(ஜூன் 14) தொடங்கியது.  , இந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அங்கு 18 லட்சம் பேர் உள்ளனர்.

இந்த நிலையில் சௌதி அரேபியாவில் நிலவும் சீதோஷ்ன நிலை ஹஜ் யாத்ரிகளுக்காக சவாலாக உள்ளது. அங்கு நிலவும்  கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணிகள் 19 பேர் பலியாகியுள்ளனர். அதன்படி ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புனிதப் பயணம் வந்துள்ள மேலும்,  2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே, பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.