பெய்ஜிங்:
இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியானது சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய இரவு விடுதி ஒன்று செயல்படுகிறது. நேற்று இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 18 பேர் சிக்கி பலியாகி உள்ளனர். 5 பேர் காயமடைந்து இருக்கின்றனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சீனாவில் பாதுகாப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்றும் விதிகளை மல்படுத்துவதும் முறைப்படுத்தப்படவில்லை என்றும் இதனால் அந்நாட்டில் தீ விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன என்றும் புகார்கள் கூறப்படுகின்றன.
சீனாவில் கடந்த 2015ல் நர்சிங் ஹோம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் பலியான சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய கேள்விகள் எழுந்தன. இதையடுத்து தீயணைப்பு வீர்ர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 21 பேரை சிறையில் அடைக்க கடந்த வருடம் சீன நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.