லக்னோ: யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வரும் உ.பி. மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 10 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். மெலும் 16 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தீவிபத்து குறித்து 12மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்க காவல்துறை மற்றும் மருத்துவமனை நிவாகத்துக்கு முதல்வர் யோகி உத்தரவிட்டு உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி பகுதியில் லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை மாவட்டத்தில் பிரசவங்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான முக்கிய மையமாக உள்ளது.

இங்குள்ள குழந்தைகள் வார்டில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் தீ மளமளவென அருகே இருந்த மற்ற வார்டுகளுக்கும் பரவியது.

குழந்தைகள் வார்டில் 54 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 குழந்தைகள் தீயில் கருகி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் 16 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் உயிருக்கு போராடி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த தீயணைப்பு படையினர், ஏராளமான வாகனங்களில் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார். இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் மருத்துவமனையில் பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநில மதல்வர் யோகிஆதித்யநாத், உடனடியாக துணை முதல்வர் பிரஜேஷ் பதக் மற்றும் முதன்மைச் செயலர் சுகாதாரம் மற்றும் கான்பூர் மண்டல ஏடிஜி ஆகியோர் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட ஜான்சிக்கு புறப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜான்சி கோட்ட கமிஷனர் மற்றும் டிஐஜியிடம் 12 மணி நேரத்திற்குள் முதல்வர் அறிக்கை கேட்டுள்ளார்.

மேலும் மருத்துவமனைக்கு வெளியே ஒழுங்கை பராமரிக்க போலீஸ் படையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், குழந்தைகள் பலியானது வேதனை அளிக்கிறது என்றும், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கான்பூரில் இருந்து நிபுணர்கள் குழுவும் அனுப்பப்பட்டுள்ளது