நாட்டின் 40 சதவிகித விமான சேவைகளை கொடுத்து வரும் இன்டிகோ விமானம், கடந்த மாதம் ஏற்பட்ட விமான எஞ்சின் கோளாறு காரணமாக 47 விமான சர்வீஸ்களை ரத்து செய்தது.
இதன் காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஆதித்ய கோஷ் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக இடைக்கால தலைமை செயல் நிர்வாகியாக ராகுல் பாட்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை இன்டிகோ நிறுவனம் அறிவித்து உள்ளது.
கடந்த மார்ச் மாதம் காத்மாண்டு விமான விபத்து எதிரொலியாக 47 விமான சர்வீஸ்களை ரத்துசெய்த இன்டிகோ, ஏ320 நியோ விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள பிடபிள்யு 1100 எஞ்சின் குறித்தும் உடனடி ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டடிருத்தது.
இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஆதித்ய கோஷ் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இண்டிகோ விமான நிறுவனம் சர்வதேச விமான சேவையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால் நிர்வாக ரீதியான மாற்றம் செய்யப்பட்டுள்ள கூறி உள்ளது. மேலும், இன்டிகோ நிறுவனத்தின் புதிய தலைவராக கிரெக் டைலர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது