டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட முடிவு செய்வது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது.

23 வயதான நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரில் குறைந்தது இருவரையும் தூக்கிலிட வேண்டும் என்று அரசு கோரியது,

அந்த மனு மீதான முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறப்பு விசாரணையை நடத்தும். அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இது பற்றி கூறியிருப்பதாவது:

குற்றவாளிகள் தங்களது தாமதமான தந்திரமான உபாயங்களால் நாட்டின் பொறுமையை சோதிக்கிறார்கள் என்றார். நீதிபதி சுரேஷ் கைட் திகார் சிறை அதிகாரிகளுககு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார்.

முன்னதாக, 4 பேரில் ஒருவரின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் மறு உத்தரவு வரும் வரைக்கும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது, குறிப்பிடத்தக்கது.