2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியாகி, தமிழ்சினிமாவில் பல அதிர்வலைகளை உண்டாக்கிய திரைப்படம் ‘அசுரன்’. பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வாயிலாக நான்காவது முறையாக இணைந்தனர் தனுசும் வெற்றிமாறனும்.

இந்நிலையில் ஜப்பான் விருது விழா ஒன்றில் ‘அசுரன்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானில் நடைபெறவுள்ள ‘ஒஸாக்கா’ எனும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்பட ‘அசுரன்’ திரைப் படம் தேர்வாகியுள்ளது.2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஃப்யூச்சர் படம் என்ற பிரிவிலும் தனுஷின் ‘அசுரன்’ படம் நாமினேட் ஆகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனரோமா என்ற பிரிவிலும்,கோல்டன் குளோப் விருது விழாவிலும் ‘அசுரன்’ திரைப்படம் திரையிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.