மிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, இன்று அ.தி.மு.க. அமைச்சரவை பதவியேற்கப்போகிறது. ஆனாலும் தேர்தல் குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்று பாரிவேந்தர் நடத்தும் “இந்திய ஜனநாயக கட்சி” (  ஐ.ஜே.கே. கட்சி) யின் “சாதனை”யும் ஒன்று.
அகில இந்திய கட்சியான (!) அக் கட்சி,  போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் சுயேட்சைகளைவிட குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதுதான் வித்தியாசமான அந்த “சாதனை”.
சட்மன்றத் தேர்தலில் பா.ஜ.க.கூட்டணியில் 45 இடங்களில் போட்டியிட்டது  இந்திய ஜனநாயக கட்சி. இந்த 45 தொகுதிகளிலும் இக்கட்சி வேட்பாளர்களைவிட சிலபல சுயேட்சைகள் அதிகமான வாக்குளை பெற்றிருக்கிறார்கள்.
images
அதிலும மதுரவாயில் வேட்பாளர்  ஆனந்தபிரியா மட்டும் சுமார் 4000 வாக்குகள் பெற்றிருக்கிறார். மற்றவர்களில் சிலர் ஆயிரத்தை தாண்டியிருக்கிறார்கள். மற்ற பலர், நூற்றுக் கணக்கிலேயே வாக்குகளை பெற்றிருக்கிறார்கள்.
இதற்கிடையே, இக் கட்சி தலைவர் பாரிவேந்தர், தன்னை முதல்வர் வேட்பாளராக விளம்பரப்படுத்திக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.