ண்டிகர்

ற்போது பஞ்சாப் சட்டசபைத் தேர்தலும் உத்தரப்பிரதேச சட்டசபை மூன்றாம் கட்ட தேர்தலும் தொடங்கி உள்ளன.

பஞ்சாப் மாநில சட்டசபையில் 117 உறுப்பினர்கள் உள்ளனர்.   இங்கு சுமார் 2.13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.   இன்று ஒரே கட்டமாக நடைபெறும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் 1,304 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.   இங்கு தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செலுத்தி வருகிறது.  இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளத் தீவிர முயற்சியில் உள்ளது. 

ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலி தளம் பிரிந்து தனியாகப் போட்டி இடுகிறது.  காங்கிரசுக்கு எதிரான வாக்குகளைக் குறி வைத்து ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியதால் காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் பிரிய அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  எனவே காங்கிரஸ் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

உத்தரப்பிரதேச மாநிலச் சட்டசபையில் மொத்தம் 403 உறுப்பினர்கள் உள்ளனர்.  இங்கு 7 ஆம் கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இன்று 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.  ஏற்கனவே 10 ஆம் தேதி நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 60.17% வாக்குகளும் 14 ஆம் தேதி நடந்த 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 61% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

இன்றைய 3ஆம் கட்ட வாக்குப்பதிவு 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது.  இன்றைய வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் 2.15 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  இங்கு 627 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர்.  இவர்களில் 245 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.

இதில் அதிகபட்சமாக சமாஜ்வாதி கட்சியில் 52 கோடீசுவரர்கள் களத்தில் இறங்கி உள்ளனர்.  அடுத்ததாக பாஜகவில் 48. பகுஜன் சமாஜ கட்சியில் 46, காங்கிரஸ் கட்சியில் 29 மற்றும் ஆம் ஆத்மி கட்சியில் 18 என கோடீசுவரர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.