டெல்லி: மேற்குவங்க மாநிலம், அஸ்ஸாமில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மதியம் ஒரு மணிவரையிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி அஸ்ஸாம் மாநிலத்தல் 37.06% மேற்கு வங்க மாநிலத்தில் 40.73% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 5 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் மொத்தம் 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 , 288 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
அதுபோல அசாமில் இன்று தேர்தல் நடைபெறும் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 11,537 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க வாக்காளர்கள் மாஸ்க் அணிந்தும், கையுறை அணிந்தபடியும் வாக்களித்து வருகின்றனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி அஸ்ஸாமில் 8.84% மேற்கு வங்கத்தில் 7.72% வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது.
காலை 10 மணி நிலவரப்படி, அசாமில் 10.21 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 15.30% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில், தற்போது 1 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி அஸ்ஸாம் மாநிலத்தல் 37.06 சதவிகித வாக்குகளம், மேற்கு வங்க மாநிலத்தில் 40.73% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.