அகமதாபாத்:
கோட்சே குறித்து டுவிட் செய்த குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, “கோட்சேவைக் கடவுளாகக் கருதும் மோடி, குஜராத்தில் நடைபெறும் வகுப்புவாத மோதல்களுக்கு எதிராக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு குரல் கொடுக்க வேண்டும்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், ஜிக்னேஷ் மேவானியை நேற்று இரவு 11:30 மணியளவில் இருந்து அசாம் போலீஸார் கைது செய்துள்ளனர். பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் இருந்தபோது அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். என்ன வழக்கு உள்ளிட்ட எந்த விவரங்களையும் அவர்கள் ஜிக்னேஷ் தரப்பினருக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குஜராத்தில் பாஜகவுக்கு சவாலாக இருக்க கூடிய தலைவர்களில் ஒருவர் ஜிக்னேஷ் மேவானி. 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டபோது வட்காம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானிக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது என்பது குறிப்பிடத்தகது.