ராஞ்சி

சாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா பாஜகவில் சம்பாய் சோரனும் ஹேமந்த் சோரனும் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இன்று ராஞ்சியில் அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம்,

”பாஜகவில் சம்பாய் சோரன் இணைந்து எங்களுக்கு வலு சேர்க்க வேண்டும், ஆனால் அவர் பெரிய தலைவர், அவரைப் பற்றி கருத்து சொல்வது சரியல்ல என்று நினைக்கிறேன். ஹேமந்த் சோரனும் பாஜகவில் இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாஜக என்றால் தேசபக்தி.

ஜார்க்கண்டில் ஊடுருவும் நபர்களை தடுக்க ஹேமந்த் சோரனிடம் பேசவும் தயாராக உள்ளோம். நம்மைப் பொறுத்தவரை நாடுதான் முதன்மையானது. இன்று ஜார்க்கண்ட் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை ஊடுருவல்காரர்களே. தேர்தலின் போது நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி ஜார்க்கண்ட் மாநிலத்தை ஊடுருவல்காரர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும்.

இந்த 2 கோரிக்கைகள் மட்டுமே எங்களிடம் உள்ளது. சம்பாய் சோரனுக்கு 3 வழிகள் உள்ளன, அவர் தற்போது டெல்லியில் இருக்கிறார். அவருடன் பேச்சு வார்த்தைக்கான வழி திறந்திருக்கிறது, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பொருத்திருந்து பார்ப்போம்”

என்று தெரிவித்துள்ளார்.