திஸ்புர்: பாஜகவில் இணைந்தால் உடனடி பெயில் வழங்கங்பபடுகிறது சிஏஏ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குசென்ற சமூக செயற்பாட்டாளர் பரபரப்பை குற்றச்சாட்டை, மத்திய மாநில அரசுகள் மீது சுமத்தியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. அங்குள்ள 126 தொகுதிகளில் மமுதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளில் ஏப்ரல் 1ம் தேதி வாக்குப்பதிவும், 3வது கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. தேர்தலில், சிஏஏ சட்டம் தொடர்பான கருத்துக்கள் முக்கியப்பங்காற்றி வருகிறத.
இந்த நிலையில், எதிர்க்கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக செயற்பாட்டாளர் அகில் கோகாய், மத்தியஅரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். இவர் சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார்.
இவர் தேர்தல் பரபப்புரையின்போது, சிஏஏக்கு எதிராக போராடியவர்கள் ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜகவில் இணைந்தால் உடனடியாக பெயில் கிடைக்க NIA அதிகாரிகள் வாய்ப்பு கொடுக்கின்றனர். விசாரணை என்ற பெயரில் அவர்கள் எங்களை உடல் மற்றும் மனரீதியாக சித்ரவதை செய்கின்றனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.