19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸௌ நகரில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் சீனாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து ஹாங்ஸௌ உள்ளிட்ட இடங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டியை செப்டம்பர் மாதம் நடத்த முடியாது என்று ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்து அதனை காலவரையின்றி ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இன்று ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் மீண்டும் கூடியது, இதில் 2023 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 முதல் அக்டோபர் 8 வரை ஹாங்ஸௌ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.