காந்திநகர்: தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிஷ்யையை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில், குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம் உள்ளது. இவரது ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வரும் பெண் சீடர்களிடம் சாமியார அத்துமீறி வந்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், கடந்த 2013-ம் ஆண்டு, ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டன விததது 2018-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அவரது ஆசிரம முன்னாள் சிஷ்யை ஒருவர், அவர்மீது , அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்தில் கடந்த 2013ம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அவரது மனுவில், தான், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு குஜராத்தின் காந்தி நகரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் சாமியார் குற்றவாளி என கூறிய நீதிமன்றம், அவரது து மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைள் என கூறிக்கொண்ட 4 பெண்கள் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை என்று அவர்களை விடுதலை செய்ததுடன், குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.