சென்னை: அசானி புயல் ஆந்திராவில் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வங்கக் கடலில் அந்தமானுக்கு வட மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, அசானி தீவிர புயலாக மாறியது. இந்த புயல், நேரடியாக ஒடிசாவை நோக்கி செல்வதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், அசானி புயல், ஆந்திராவில் கரை கடக்கும் என, வெளிநாட்டு வானிலை ஆராய்ச்சி அமைப்புகள் தெரிவித்தன. அதன்படி நள்ளிரவு எந்தவித ஆர்ப்பாட்டமின்றி அசானி புயல் கரையை கடந்தது. , ஆந்திராவின் மசூலிப்பட்டினம், நரசப்பூர் இடையே அமைதியாக கரையை கடந்தது. வானிலை மைய கணிப்புப் படி, ஒடிசாவுக்கு செல்லவில்லை என்று கூறப்பட்டள்ளது.

ஆசானி புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  புயலின் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருவள்ளூர்,விருதுநகர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,ராணிப்பேட்டை,வேலூர் ஆகிய பதினோரு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மேலும்,  அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.