சென்னை
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறையத் தொடங்கி உள்ளது.
சென்னையில் கோயம்பேடு சந்தையில் காய்கறி வரத்து மழை காரணமாக வெகுவாக குறைந்தது.
இதனால் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்தது.
தற்போது கோயம்பேடு சந்தைக்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஆந்திரா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் இப்போது ரூ.5 ஆகக் குறைந்துள்ளது.
மேலும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட அனைத்து காய்கறிகள் விலைகளும் குறைந்து வருகின்றன.
இதையொட்டி சில்லறை விற்பனை விலையும் வெகுவாக குறையும் எனக் கூறப்படுகிறது.