இந்தியில் வந்த கடிதத்துக்கு கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மலையாளத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

மத்திய ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் ரவநீத் சிங் பிட்டு தனக்கு ஹிந்தியில் அனுப்பிய கடிதத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு அனுப்பும் கடிதங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்ற சட்ட விதிக்கு முரணாக மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு தென் மாநிலங்கள் எதிர்த்து தெரிவித்து வருகின்றன.

70 ஆண்டு நடைமுறையை கைவிட்ட மத்திய அரசு இந்த மாநிலங்கள் மீது இந்தி திணிப்பை மறைமுறைகமாக மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் இதே மத்திய இணை அமைச்சர் ரவநீத் சிங் பிட்டு-விடம் இருந்து இந்தியில் வந்த கடிதத்திற்கு தமிழக எம்.பி. எம்.எம். அப்துல்லா தமிழில் பதிலளித்திருந்தார்.

இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளாத மாநில முதல்வர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்து இந்தியில் கடிதம் அனுப்பி வரும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநில எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் ரவநீத் சிங் பிட்டு தனக்கு ஹிந்தியில் அனுப்பிய கடிதத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மலையாளத்தில் பதில் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.