சிங்கப்பூர்

கில உலக அளவில் சிறந்த நகராக சிங்கப்பூர் இடம் பெற்றுள்ள நிலையில் இந்திய நகரங்கள் கீழிறங்கி உள்ளன.

சிங்கப்பூர் பல்கலைக்கழகம் மற்றும் இன்ஸ்டிடியூட் ஒஃப் மானேஜ்மெண்ட் ஆகியவை இணைந்து 2020க்கான சிறந்த நகரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.   இந்த சிறந்த நகர பட்டியல் ஒவ்வொரு நகரிலும் உள்ள காற்று மாசு அளவு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.  அதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் ஹெல்சின்கி மற்றும் மூன்றாம் இடத்தில் ஜூரிச் ஆகிய நகரங்கள் உள்ளன.   அடுத்ததாக ஆக்லாந்து (4). ஆஸ்லோ (5), கோபன்ஹேகன் (6), ஜெனிவா (7), தாய் பெய் (8), ஆம்ஸ்டர்டாம் (9) மற்றும் நியூயார்க் (10) என உள்ளன.

இந்திய நகரங்களான டில்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகியவை தர வரிசையில் கீழிறங்கி உள்ளன. சென்ற ஆண்டு 67 ஆம் இடத்தில் இருந்து ஐதராபாத் தற்போது 85 ஆம் இடத்துக்கு வந்துள்ளது. டில்லி 68லிருந்து 86 ஆம் இடத்தை அடைந்துள்ளது.  இதைப்போல் மும்பை 78 லிருந்து 93 மற்றும் பெங்களூரு 79லிருந்து 95 எனத் தரம் இறங்கி உள்ளன.