சென்னை
தமிழகத்தில் இரண்டாம் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் அதிக அளவில் காணப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கேரளா, டில்லி எனப் பல இடங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளது.
சென்னையை அடுத்த காஞ்சீபுரத்தில் ஒரு பொறியாளர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார் அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பரவவில்லை என்பதால் தமிழக மக்கள் சற்று நிம்மதியுடன் இருந்தனர். ஆனால் நேற்று சுகாதார அமைச்சர் வெளியிட்ட செய்தியால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது
தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் இரண்டாம் கொரொனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் டில்லியில் இருந்து வந்துள்ள 20 வயது இளைஞர் ஆவார். அவரை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது” என அறிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]