எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் எந்தெந்த இடங்கள் பிடிக்கும்? – பகுதி 1
வீட்டில் எவ்வளவு இடம் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட இடத்தில் தான் நாம் அதிக நேரம் செலவு செய்ய விரும்புவோம். அவரவர் ராசியின் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் அதிகமாக நேரம் செலவு செய்ய விரும்புகிறார்கள்? என்பதை இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.
சிலர் அந்த இடத்தில் அதிக நேரம் இருந்தால் தான் ஓய்வாக உணர்வார்கள். அது அவர்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கும். அப்படிப்பட்ட இடங்கள் என்னென்ன? உங்களுடைய ராசிக்கு நீங்கள் எந்த இடத்தில் அதிக நேரம் இருப்பீர்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள இப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.
இன்று முதல் பகுதியில் மூன்று ராசிகளைக் குறித்துக் காண்போம்
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அதிகம் செலவழிக்க விரும்பும் இடமாக அவர்கள் தேர்ந்தெடுப்பது தங்களுக்குரிய விருப்பமான செயலை செய்யும் இடமாக இருக்கிறது. அதாவது அவர்கள் தோட்டக் கலையை விரும்பினால் அதிகமாகத் தோட்டத்திலும், உடற்பயிற்சி போன்ற விஷயங்களை செய்பவர்களாக இருந்தால் உடற்பயிற்சி கூடத்திலும் அதிகம் செலவிட விரும்புவார்கள். மேலும் இவர்கள் சமைப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதால் சமையலறையும் அதிகமாக உபயோகிக்கிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் ஆக இருப்பார்கள். இவர்கள் தங்களைச் சோர்வாகவும் அல்லது களைப்பாகவும் உணரும் நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளியல் செய்வதை விரும்புவார்கள். இதனால் இவர்கள் அதிக நேரம் குளியலறையில் செலவிட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கலகலப்பான குணமுடையவர்கள். எப்போதும் தங்களை சுற்றி மகிழ்ச்சி நிறைந்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதனால் அவர்கள் விருந்தினர்கள் இருக்கும் அறையை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். புத்தகப் பிரியர்களாக இருக்கும் இவர்கள் எப்போதும் புத்தகம் இருக்கும் இடத்தில் அமர்ந்து எதையாவது வாசித்துக் கொண்டே இருப்பார்கள்.
நாளை அடுத்த்ட்ட பகுதியில் சந்திப்போம்