லண்டன்
கொரோனா தாக்குதலில் இருந்து குணமாகி வீடு திரும்பிய இங்கிலாந்து பிரதமரை தற்போது பணிகளைத் தொடர வேண்டாம் என மருத்துவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர்

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து செயற்கை சுவாச கருவிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் சாதாரண வார்டுக்கு மாற்றபட்டார். நேற்று போரிஸ் ஜான்சன் மருத்துவமனை வளாகத்தில் நடைப்பயிற்சிகளை மேற்கொண்டார். இன்று அவர் பூரணமாகக் குணம் அடைந்ததையொட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இது குறித்து பிரதமரின் செய்தி தொடர்பாளர், “பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பிய போதிலும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தற்போது பணிகளைத் தொடர மாட்டார். அவரை நன்கு கவனித்த செயிண்ட் தாமஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]