டெல்லி
சர்வதேச ஆராய்சி நிறுவன ஆய்வில் அரசு அறிவித்ததை விட அதிக அளவில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொடிய வைரசான கொரோனா, சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. பிறகு அது உலக நாடுகள் பலவற்றில் பரவி ஏராளமானோர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதையொட்டி உலகெங்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கபட்ட பின்னர் கொரோனா ஓரளவு குறையத் தொடங்கியது.
கொரோனாவால் இதியாவில் 4,81,000 பேர் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ அரசு தரவுகள் கூறுகின்றன. அதே வேளையில் இந்திய அரசு வெளியிட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்ததாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனாவால் கூடுதலாக 11.9 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், இது அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 8 மடங்கு அதிகம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இந்த ஆய்வு முடிவுகள் ஏற்கக்கூடியது இல்லை எனவும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்த ஆய்வில் பல குளறுபடிகள் உள்ளன. எனவேதான் ஆய்வாளர்கள் தவறான முடிவுக்கு வந்துள்ளனர். இந்தியாவின் சிவில் பதிவேடு அமைப்பில் 99 சதவீத உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன. இந்தியாவில் 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2020-ல் 4.74 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே 11.99 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]