பெரோஸ்பூர்

ந்திய பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப்  பகுதியில் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டம் அமைந்துள்ளது இம்மாவட்டத்தில்  இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ஒரு நெல் வயல் உள்ளது.

இந்த வயலில் இருந்து பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவ்வாறு மீட்கப்பட்ட ஆளில்லா விமானம் குவாட்காப்டர் (டிஜேஐ மெட்ரிஸ் 300 ஆர்டிகே) ஆகும்.

பாகிஸ்தானின் இந்த ஆளில்லா விமானம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில், அமிர்தசரசில் உள்ள ஒரு கிராமத்தின் புறநகரில் இருந்து பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் பஞ்சாப்  எல்லையில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.