திருவனந்தபுரம்: கொரோனா காலத்தில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் கூடியிருப்பதால், நிதிசார்ந்த முறைகேடுகளும் அதிகரித்திருப்பதாகவும், எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென்று கூறியுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
“ஆன்லைன் பரிவர்த்தனையில், பாதுகாப்பு, நம்பகத்தன்மை, நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை கொண்டுவரும் வகையில், தேசிய சைபர் பாதுகாப்பு வியூகம்-2020 ஐ மத்திய அரசு கொண்டுவந்தது என்றுள்ளார்” அவர்.
கொரோனா பரவல் காரணமாக, தற்போது நாட்டினுடைய பணிச் சூழலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“டிஜிட்டல் பணம் செலுத்து நடவடிக்கைகளும், சமூக வலைதளங்களில் பங்கேற்பதும் அதிகரித்துள்ளன. நாம் ஒரு அளவுக்குமீறி, ஆன்லைன் பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அதை சைபர் குற்றவாளிகள் அடையாளம் காண்கிறார்கள். எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றுள்ளார் தோவல்.