டில்லி

ச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேட்பு மனுவில் கிரிமினல் வழக்கு நிலுவை விவரம் அளிக்காத முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மீது வழக்கு தொடரப்பட உள்ளது.

கடந்த 2014 ஆம் வருடம் மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சதீஷ் உகே என்பவர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மீது வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.  அந்த வழக்கில் ஃபட்நாவிஸ் தனது வேட்பு மனுவில் தன் மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை தெரிவிக்கவில்லை எனப் புகார் அளித்திருந்தார்.

இந்த இரு வழக்குகளும் ஏமாற்று மற்றும் போர்ஜரி குற்றங்களுக்காக 1996 மற்றும் 1998 ஆம் வருடம் பதியப்பட்டவை ஆகும்.  மக்கள் பிரதிநிதி சட்டப்பிரிவு 125 ஏ வின்படி இந்த வழக்கை ஃபட்நாவிஸ் மீது குற்றம் சுமத்த முடியாது எனவும் அவர் மீது வழக்கு தொடர முடியாது எனவும்  செஷன்ஸ் நீதிமன்றமும் அதன் பிறகு மும்பை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு அளித்தன.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு அந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்தது   கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவேந்திர ஃபட்நாவிஸுக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது . அதை எதிர்த்து சீராய்வு மனு தக்கல் செய்யப்பட்டது.

அப்போது தேவேந்திர ஃபட்நாவிஸ் முந்தைய உத்தரவை ரத்து  செய்யும்படி கேட்டுக் கொண்டார். உச்சநீதிமன்றம் இன்று அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்து தேர்தல் மனுவில் நிலுவையில் உள்ள தனது கிரிமினல் வழக்கை மறைத்தது குறித்த வழக்கை அவர் எதிர்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பு அளித்துள்ளது.