புதுச்சேரி
துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்காததால் இன்று புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கபட மாட்டாது என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை ஒட்டி நாடெங்கும் மதுக்கடைகள் மூடப்பட்டன.  தற்போது முடிந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் விதிகள் தளர்த்தப்பட்டு ஒரு சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.   இதில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கி தமிழக அரசு மதுக்கடைகள் திறந்தது.
பாண்டிச்சேரியில் இதுவரை மதுக்கடைகள் திறக்காமல் தமிழகத்தில் திறந்தது குறித்து பலரும் விமர்சனம் எழுப்பின்ர்.  புதுச்சேரி முதல்வர் இன்று முதல் அம்மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் எனவும் கலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவித்தார்.   இதை மதுப்பிரியர்கள் மன மகிழ்வுடன் கொண்டாடினர்.
புதுச்சேரி அரசின் இந்த முடிவுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கவில்லை.  இதனால் இன்று ம்துக்கடைகள் திறக்கப்படாது என புதுவை முதல்வ்ர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.   மேலும் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலை பெற முயற்சி நடப்பதால் நாளை மறுநாள் மதுக்கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.