மடிகேரி, கர்நாடகா,
துபாயில் இருந்து பெங்களூரு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதால் அவருடன் பயணித்தவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கர்நாடகாவில் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே கர்நாடக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறது. ஆயினும் ஒரு சில வேளைகளில் தவறுதல் உண்டாவதால் அதை அரசு சரி செய்து வருகிறது.
குடகு மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில் “துபாயில் இருந்து 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 15 ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் எண் 6இ96 மூலம் வந்தவர்களும் பெங்களூரு சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 11.33 மணிக்கு (விராஜ்பேட் மற்றும் முர்நாத் வழியாக) மடிகேரி சென்றவ்ர்க்ளும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லவும்.
குடகுவில் இன்று அதாவது 19 ஆம் தேதி அன்று மேற்கூறிய விமானம் மற்றும் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த எச்சரிக்கை விடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.