ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு ராஜினாமா செய்ததை அடுத்து மனோஜ் சின்ஹா புதிய ஆளுநர் ஆகிறார்.
கடந்த வருடம் விதி எண் 360 நீக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டது. அதையொட்டி அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்குத் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டார். அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர் அவரது ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்தார்.
இதையொட்டி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்குத் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
மனோஜ் சின்ஹா மத்திய ரயில்வே இணை அமைச்சராக பணியாற்றியவர் ஆவார்.