பெங்களூரு

தொடர்ந்து 3 நாட்களாக வெள்ளத்தில் மிதந்து வரும் பெங்களூருவில் வெள்ளத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை முதல் பெங்களூருவில் தினமும் இரவு நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.பல இடங்களில் மழைநீர் வெளியேற இடமில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.

எனவே சாலையில் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெங்களூரு ஹொரமாவு வார்டில் உள்ள சாய் லேஅவுட் மற்றும் வட்டரபாளையா ஆகிய பகுதியை சுற்றியுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சுமார் 5 ஆயிரம் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் ரப்பர் படகு மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். கனமழையால் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் சசிகலா (31) என்ற பெண்ய்ம் மின்சாரம் தாக்கி மன்மோகன் காமத் (63) மற்றும் தினேஷ் (12) ஆகியோரும் உயிரிழந்து மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.