ரிஷப் பன்ட் உடன் ஜோடி சேர்ந்த அஸ்வின், 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன், தனது முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து எடுத்த 205 ரன்களை, இந்தியாவால் தனது முதல் இன்னிங்ஸில் எட்ட முடியுமா? என்ற பெரிய இக்கட்டு ஏற்பட்டது.
அதன்பிறகு, ரிஷப் பன்ட உடன், வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். இந்தியா, அபாய கட்டத்தை தாண்ட வேண்டுமெனில், ரிஷப் பன்ட் – வாஷிங்டன் சுந்தர் களத்தில் நின்றே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சோபிக்காத சுந்தர், இந்தமுறை தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம். எனவே, பன்ட் உடன் தீர்மானகரமாக களம் கண்டார்.
ரிஷப் பன்ட் அதிரடி காட்ட, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சுந்தர். முடிவில், பன்ட் சதத்தை எட்ட, சுந்தரும் அரைசதத்தை தொட்டார். 101 ரன்களுடன் பன்ட் வெளியேறிவிட, சுந்தர் இன்னும் களத்தில் நிற்கிறார்.
மொத்தம் 117 பந்துகளை சந்தித்துள்ள அவர், 8 பவுண்டரிகள் உதவியுடன் 60 ரன்களை சேர்த்து, இன்னும் களத்தில் உள்ளார். அவருடன் 11 ரன்களை எடுத்து அக்ஸார் படேல் களத்தில் நிற்கிறார்.
நாளை, இந்திய அணியால், எஞ்சிய விக்கெட்டுகளை வைத்து, 350 ரன்களைத் தொட முடிந்தால் அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். இங்கிலாந்து அணியின் தோல்விக்கான முன்னுரையும் எழுதப்படும்.