காத்மண்ட்:
பருவநிலை மாற்றம் காரணமாக எவரெஸ்ட் சிகரம் உருகுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல், காற்று மாசு காரணமாக பனி மலைகள் முழுவதும் உருகிவிடும் என ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில், வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக எவரெஸ்ட் சிகரம் உருகுவது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த ஆய்வின் போது பனி மலைக்குள் புதையுண்ட உடல்கள் தென்பட ஆரம்பித்துள்ளன.
1922-ம் ஆண்டு முதல் தற்போது வரை, 200-க்கும் மேற்பட்ட மலையேறும் வீரர்கள் எவரெஸ்ட் மலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
பனி மலை உருகுவதால், இறந்தவர்களின் உடல்கள் தென்படுவதாக ஆய்வர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மற்றொரு எச்சரிக்கையையும் ஆய்வர்கள் விடுத்துள்ளனர்.
2100-ம் ஆண்டு உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் பனிப் பாறைகள் உருகி, நேபாளத்தில் தூத்கோசி ஆற்றின் நீரோட்டத்தை மாற்றிவிடும்.
வெள்ள அபாயத்தில் மலைவாழ் இனங்கள் பாதிக்கப்படும் என்றும், 75 சதவீதம் மலைகள் முற்றிலும் உருகிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.