மும்பை
வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால் மாருதி கார் நிறுவனம் தனது காலாண்டு உற்பத்தியை கணிசமாக குறைத்துள்ளது.
இந்தியாவில் மாருதி கார்களுக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது. சொல்லப்போனால் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் முதலாம் இடத்தை மாருதி பிடித்து வந்தது. குறிப்பாக முதல் கார் வாங்குபவர்கள் மாருதியை பெரிதும் விரும்பி வாங்கினர்.
சமீபகாலமாக கார் வாங்குபவர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. முதல் கார் வாங்குவோர் பலரும் பெரிய கார்களை வாங்க தொடங்கி உள்ளனர். இதனால் சந்தையில் மாருதி கார் விற்பனை பெரிதும் குறைந்துள்ளது.
இதை ஒட்டி மாருதி நிறுவனம் தனது கார் உற்பத்தியை குறைத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜுன் வரையிலான காலாண்டு காலத்தில் 1,72,000 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 1,26,000 மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இது சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 26.8% குறைவாகும். கடந்த 4 வருடங்களில் இந்த கார் நிறுவன உற்பத்தி இரு மடங்கு அதிகரித்திருந்தது. தற்போது நான்கின் ஒரு பங்குக்கும் மேல் குறைந்துள்ளது.