பற்றி எரியும் டார்ஜிலிங்க் : ராணுவத்துக்கு அழைப்பு

டார்ஜிலிங்க்

போராட்டக் குழுவினர் நடத்தும் வன்முறையினால் டார்ஜிலிங்க் நகரமே பற்றி எரிகிறது.  கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மலைநகரம் டார்ஜிலிங்க்

இங்கு கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா என்னும் அமைப்பு கூர்க்காக்களுக்கு தனி மாநிலம் கேட்டு போராடி வருகிறது.

இங்கு தனது அமைச்சரவை கூட்டத்தை கூட்ட முதல்வர் மம்தா பானர்ஜி திட்டம் இட்டிருந்தார்.

இதனையொட்டி, முதல்வருக்கு எதிராக கூ ஜ மோ போராட்டத்தில் ஈடுபட்டது.

இன்று காலை கூட்டம் நடக்கவிருக்கும் இடத்தின் முன் போராளிகள், ஆரம்பித்த போராட்டத்தில் சிறிது நேரத்தில் வன்முறை வெடித்தது.

கூ ஜ மோ தொண்டர்கள் போலீசார் மீது, கற்கள், செங்கல்கள் ஆகியவற்றை எறிந்ததில் 50 போலீசார் காயமடைந்தனர்

24 அரசு மற்றும் போலீஸ் வாகனங்களும், ஒரு சுற்றுலா பேருந்தும் தீக்கிரையாகின.

கலவரம் நகரெங்கும் பரவியது.

நிலைமை கட்டுக்கடங்கவில்லை.

முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, நிலைமையை கட்டுப்படுத்த, உடனடியாக ராணுவத்தை அனுப்புமாறு பிரதமர் மோடி உட்பட அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளார்.

இரண்டு ராணுவப் பட்டாளம் 180 வீரர்களுடன் உடனடியாக டார்ஜிலிங்க்குக்கு விரந்துள்ளது.

மேலும் ராணுவம் அனுப்பபடும் எனத் தெரிகிறது.

இப்போது அங்கு 20,000க்கும் மேல் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு கூ ஜ மோ உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் வெளியேற அரசு இன்னும் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

பயணிகள், ஊரை சுற்றிப் பார்க்க இருப்பிடத்தை விட்டு வெளிவந்துள்ளனர்.

திடீரென வெடித்த கலவரத்தினால் அவர்கள் தங்களின் தங்குமிடத்துக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

நிலைமையக் கண்காணித்து கட்டுக்குள் கொண்ட் வருவதற்காக டார்ஜிலிங்கிலேயே முதல்வர் தங்கி இருப்பார் எனக் கூறப்படுகிறது.

 


English Summary
As darjeeling burns Army called in by mamata banerjee