டில்லி

கொரோனா சோதனை உபகரணங்கள் இதுவரை வந்து சேராததால் இந்தியா தவிப்பில் ஆழ்ந்துள்ளது.

உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது.  இதைக் கட்டுப்படுத்த இந்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த ஊரடங்கு முடிவதற்குள் துரித சோதனை உள்ளிட்ட பல சோதனை உபகரணங்கள் வாங்க அரசு திட்டமிட்டது.

இதையொட்டி பல உலக நாடுகளில் இருந்து சோதனை உபகரணங்கள் ஏற்றுமதி செய்ய இந்தியா ஆர்டர் அளித்தது  தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது.  எனவே எதிர்பார்த்தபடி இந்தியாவுக்கு உபகரணங்கள் வரவில்லை.

இதுவரை உபகரணங்கள் வர வேண்டிய ஐந்து கெடு தினங்களிலும் எந்த நாட்டில் இருந்தும் இந்தியாவுக்கு உபகரணங்கள் வரவில்லை. இதனால் தற்போது துரித சோதனை நடத்த உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  எனவே மீண்டும் பழைய முறையில் சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.