புதுடெல்லி:

ந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3500-ஆக அதிகரித்துள்ளது. 62 மாவட்டங்களில் 80 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 14 ஆம் தேதி நாடு தழுவிய 21 நாள் முடிவடைந்த பின்னரும் இந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்புள்ளது என்று அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 24 மணி நேரத்தில் 505 புதிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இப்போது 3,577 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 83 ஆகவும் உயர்ந்துள்ளது. மார்ச் 30 அன்று, 1,251 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அதில்32 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் மதிப்பீடுகளின்படி, தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும், ஆனால் கடந்த மாதம் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் சபை நடக்கவில்லை என்றால் இந்த எண்ணிக்கை குறைவாகவே இருந்திருக்கும்

அரசாங்கத்தில் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கையின் படி, 62 மாவட்டங்களில், கட்டுப்பாட்டு மண்டலங்கள் அல்லது அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் சீல் வைக்கப்படுள்ளது. கடந்த மாதம் வைரஸ் பரவ வாய்ப்புள்ள பகுதியாக பில்வாராவில் (ராஜஸ்தான்) இருந்தது கண்டறியப்பட்டது.

இதற்கிடையில், வைரஸ் காற்று மூலம் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியா போதுமான சோதனைகளை செய்யவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், கடந்த இரண்டு நாட்களில் தினசரி சோதனைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று 5,800 முதல் ஏப்ரல் 4 அன்று 10,034 வரை. ஞாயிற்றுக்கிழமை 9,369 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் 89,534 மாதிரிகள் இதுவரை சோதிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமையன்று, ஐ.சி.எம்.ஆர் சில பகுதிகளில் விரைவான ஆன்டிபாடி சோதனைகளைப் பயன்படுத்துவதற்கான ஆலோசனையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.