சிம்லா: ஊரடங்கின் காரணமாக காற்று மாசு குறைய, இமாச்சல பிரதேசத்தில் உள்ள தால்ஆதர் மலை, ஜலந்தரில் இருந்தே தெரியும் நிலை உருவாகி இருக்கிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. அதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் அத்யாவசிய தேவைகளுக்கான வாகன போக்குவரத்து தவிர மற்ற சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வாகன போக்குவரத்து இல்லாததால், காற்றின் மாசும் குறைந்திருக்கிறது. அதன் எதிரொலியாக காற்றின் தரம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றமாக இருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள இமயமலையின் ஒரு பகுதியாக இருக்கும் தால்ஆதர் மலை, ஜலந்தரில் இருந்தே பார்க்க முடிகிறது.
பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மக்களுக்கு இந்த மலை மிக நன்றாக தெரிந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு, காற்று மண்டலம் பசுமையாக காணப்படுகிறது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பயன்பாட்டில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றான லூதியானா, தூய்மையான நகரம் என்ற தர குறியீட்டை பெற்றிருக்கிறது.