கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆர்யா. இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகும் நிலையில், முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்டுள்ளார் ஆர்யா.
அதன்படி அக்குழந்தைக்கு ‘ஆரியானா’ என பெயரிட்டுள்ளனர். இதையடுத்து ஆர்யா, சாயிஷா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.