டெல்லி சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 54 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் அதன்மூலம் ஆம் ஆத்மி ஆட்சியை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பாஜக மீது அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த சில நாட்களாக குற்றம்சுமத்தி வந்தார்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலத்தை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் 62 பேர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் அதில் 54 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர், மீதமுள்ள 8 பேர் அவைக்கு வரவில்லை, இவர்களில் 2 பேர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பலத்தை நிரூபித்த அரவிந்த கெஜ்ரிவால் பின்னர் செய்தியாளர்களிடம் 2024ம் ஆண்டு பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியாவிட்டால் 2029ல் ஆம் ஆத்மி கட்சி தனியாக பாஜக-வை வீட்டுக்கு அனுப்பும்.
டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கட்சி தொடங்கி 12 ஆண்டுகளில் தேசிய கட்சி என்ற அந்தஸ்த்துடன் வலுவான இடத்தில் உள்ள நிலையில் பாஜக-வை எதிர்கொள்ளக்கூடிய கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது என்று கூறினார்.