கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமான Red Bull அணியில் சமீபத்தில் டிரைவர் மாற்றங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இதில் மிக இளம் வயதில் F1 அளவுக்கு உயர்ந்துள்ள அர்விட் லிண்ட்பிளாட் ஒட்டுமொத்த ரேஸிங் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

2007ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சர்ரே, வெர்ஜீனியா வாட்டரில் பிறந்த அர்விட் குஸ்டாவ் லிண்ட்பிளாட்பின் தந்தை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் தாய் பிரிட்டிஷ் இந்தியர்.
5 வயதிலேயே ஈஷர் பகுதியில் உள்ள டெய்டோனா சாண்டவுன் பார்க் மையத்தில் கார்டிங் தொடங்கிய லிண்ட்பிளாட் UK கார்டிங் லெவலில் மிக வேகமாக உயர்ந்தார்.
2013ம் ஆண்டு கார்ட்டிங்கிலிருந்து காருக்குத் தாவிய அவர் F4 ஓட்டுநராக ஒரே சீசனில் இத்தாலி, UAE, Euro 4.என பல தொடர்களில் போட்டியிட்டதுடன் Macau F4 ரேஸை வென்றார்.

2021-இல் 13 வயதிலேயே Red Bull Junior Team-ல் ஒப்பந்தம் செய்யப்பட்ட அர்விட் லிண்ட்பிளாட் தற்போது Red Bull-ன் துணை அணியான Racing Bulls-ல் F1 ஓட்டுநராக அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்தான் சிங்கிள்-சீட்டர் கார்கள் ஓட்டத் தொடங்கிய ஒரு டீனேஜருக்கு இது ஜெட்வேக முன்னேற்றம் என்றபோதும் F1 வட்டாரத்தில் உள்ள பலர் இதை எப்போதோ எதிர்பார்த்திருந்தனர்.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அவர் களமிறங்கும்போது, F1 வரலாற்றில் மூன்றாவது குறைந்த வயதில் பங்கேற்கும் டிரைவராக இருப்பார்.