பரிமலை

ருண்குமார் நம்பூதிரி சபரிமலை கோவில் மேல் சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

.

அடுத்த மாதம் 15 ஆம் தேதியுடன் சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள மாளிகப்புரம் கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருபவர்களின் பணிக்காலம் நிறைவு பெறுகிறது. எனவே 2024-25  ஆண்டு சீசனை முன்னிட்டு சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நேற்று சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது.

சபரிமலை கோவிலில் உஷபூஜைக்கு பிறகு நேற்று காலை புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கியது. மேல்சாந்திக்கான போட்டியில் 25 பேரும், மாளிகப்புரம் மேல்சாந்திக்கான போட்டியில் 15 பேரும் இருந்தனர். தனித்தனி சீட்டுகளில் அவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு சன்னிதானத்தில் வைத்து தந்திரி கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் முன்னிலையில் கோவில் பாரம்பரியப்படி குலுக்கல் நடத்தப்பட்டது.

சபரிமலைக்கான புதிய மேல்சாந்திக்கான சீட்டை பந்தளம் ராஜகுடும்பத்தை சேர்ந்த சிறுவன் ரிஷிகேஷ் வர்மாவும் மாளிகப்புரம் மேல்சாந்தியை பந்தளம் ராஜகுடும்பத்தை சேர்ந்த சிறுமி வைஷ்ணவி வர்மாவும் தேர்வு செய்தனர். சபரிமலை புதிய மேல்சாந்தியாக கொல்லம் சக்திகுளங்கரையை சேர்ந்த அருண்குமார் நம்பூதிரியும், மாளிகப்புரம் மேல்சாந்தியாக கோழிக்கோட்டை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

அடுத்த மாதம் 16 ஆம் தேதி பொறுப்பேற்கும். இவர்களது பணிக்காலம் ஒரு வருடம் ஆகும்.