நியூயார்க்: அமெரிக்காவின் மேரிலாந்து லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட இந்திய அமெரிக்கர் அருணா மில்லர் வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தலைநகரை ஒட்டியுள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தல் நேற்று (8ந்தேதி) நடைபெற்றது. உடனே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில், போட்டியிட்ட இந்திய அமெரிக்க வம்சாவழியைச் சேர்ந்த அருணா மில்லர் வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி என்ற பெருமையை அருணா மில்லர் இன்று பதிவு செய்தார்.
அமெரிக்காவில் 435 மக்களவைத் தொகுதிகளுக்கும் நூறு செனட் சபை இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் 36 மாநிலங்களின் ஆளுநர்களையும் மக்கள் தேர்ந்தெடுக்கவிருக்கின்றனர். அமெரிக்க இடைத்தவணைத் தேர்தலில், செனட் சபைக்குக் கடும் போட்டி நிலவுகிறது.
ஆகக் கடைசி நிலவரப்படி செனட் சபையில் குடியரசுக் கட்சி ஏற்கெனவே உள்ள 29 இடங்களுடன் 15 இடங்களை வென்றுள்ளது. அதனிடம் இப்போது 44 இடங்கள் இருப்பதாக BBC தகவல் கூறுகிறது. ஜனநாயகக் கட்சி, ஏற்கெனவே உள்ள 36 இடங்களுடன் தற்போது 6 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. அதற்கு இப்போது செனட் சபையில் 42 இடங்கள் உள்ளன. இடைத் தேர்தலுக்கு முன்னர் செனட் சபை ஜனநாயகக் கட்சியின் வசம் இருந்தது.
தற்போது போட்டி நடைபெறும் 35 இடங்களில் குடியரசுக் கட்சியின் கரம் மேலோங்கினால் அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் போகும். அது 2024ஆம் ஆண்டு வரக்கூடிய அடுத்த அதிபர் தேர்தலைப் பாதிக்கக்கூடும்.
மக்களவையைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 435 இடங்களுக்குப் போட்டி நடைபெறுகிறது. அவற்றில் 98 இடங்கள் ஜனநாயக் கட்சி வசம் சென்றுள்ளன. 158 இடங்களைப் பிடித்து குடியரசுக் கட்சி முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. மக்களவை, செனட் சபையோடு சில மாநிலங்களின் ஆளுநர்கள், மாநிலச் செயலாளர்கள், மாநிலத் தலைமைச் சட்ட அதிகாரிகளையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஆளுங்கட்சியான ஜனநாயகக் கட்சியின் அதிபர் ஜோ பைடன் அரசியல் கூட்டத்தில் பேச மேரிலந்து (Maryland) மாநிலத்துக்குச் சென்று வாக்கு சேகரித்தார். அதுபோல, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சித் தலைவரான அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் ஓஹாயோ (Ohio) மாநிலத்தில் வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மேலிலேண்ட் கவர்னர் பதவிக்கான தேர்தலில் இந்திய அமெரிக்க வம்சாவழியைச் சேர்ந்த அருணா மில்லர் வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று பதவி ஏற்கிறார்.
58வயதாகும் மில்லர், மேரிலாண்ட் ஹவுஸின் முன்னாள் பிரதிநிதி. தற்போது கவர்னர் ரேசில் போட்டியிட்டு, லெப்டினன்ட் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளுநர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ லெப்டினன்ட் கவர்னரும் ஆளுநராவார்.
வெற்றி பெற்ற மில்லர் பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில், “மேரிலேண்ட், ஜனநாயகம் வாக்குச் சீட்டில் இருக்கும்போது சிறிய ஆனால் வலிமைமிக்க அரசு என்ன செய்ய முடியும் என்பதை இன்று இரவு தேசத்திற்குக் காட்டியுள்ளீர்கள். நீங்கள் பிரிவினையை விட ஒற்றுமையையும், உரிமைகளை கட்டுப்படுத்துவதை விட உரிமை களை விரிவுபடுத்துவதையும், பயத்தின் மீது நம்பிக்கையையும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்களின் அடுத்த கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னராக வெஸ் மூரையும் என்னையும் தேர்ந்தெடுத்தீர்கள்,” என்று மில்லர் தனது வெற்றி உரையில் கூறினார்.
மேலும், அமெரிக்காவின் வாக்குறுதிக்காக நான் ஒருபோதும் உற்சாகமடைவதை நிறுத்தவில்லை. அந்த வாக்குறுதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் ஒருபோதும் போராடுவதை நிறுத்த மாட்டேன். நாங்கள் யாரையும் விட்டுச் செல்லாத மேரிலாந்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன் இந்த வாக்குறுதி தொடங்குகிறது,” என்று அவர் கூறினார்.
மேரிலாந்து லெப்டினன்ட் கவர்னர் அருணா மில்லரின் பூர்விகம் இந்தியாவில், ஆந்திரா மாநிலமாகும். இவர்கள் 1972ல் குடும்பத்தோடு அமெரிக்கா சென்று செட்டில் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.