டில்லி,
ஆம்ஆத்மி கட்சி தலைவர்மீதான அவதூறு வழக்கின்போது, மத்திய சட்ட அமைச்சர் அருண்ஜேட்லி குறித்து ராம்ஜெத்மலானி அநாகரிக விமர்சித்தார்.
டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் தனது தரப்பு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு டில்லி ஐகோர்ட் பதிவாளர் முன் நேற்று முன்தினம் அருண் ஜெட்லி ஆஜரானார். அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, அமைச்சர் அருண் ஜெட்லி குறித்து, சில அநாரிக வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலை யில் இதுகுறித்து டில்லி ஐகோர்ட்டு நீதிபதி மன்மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது
மூத்த வழக்கறிஞராக உள்ள ராம் ஜெத்மலானி, இவ்வளவு மோசமான வார்த்தையை பயன்படுத்தியது, மிகவும் இழிவான செயல்; இதை அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லி, அவர் பயன்படுத்தி இருந்தால், கெஜ்ரிவால் இந்த கோர்ட்டில் ஆஜராகி, அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார்.