டில்லி

ணமதிப்பு குறைக்கப்பட்ட பின் ரூ, 11.23 கோடி பெறுமானமுள்ள கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மக்கள் அவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது :

”பணமதிப்பு குறைக்கப்பட்ட பின் 1.58 லட்சம் கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  இதன் மொத்த மதிப்பு ரூ. 11.23 கோடி ஆகும்.

ரிசர்வ் வங்கி ஒரு மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதன் மூலம் புதிய 500 மற்றும் 2000 ரூ நோட்டில் உள்ள காந்தி படத்தைக் கொண்டு அதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முடியும்.  இதை ப்ளெ ஸ்டோர் மூலம் ஆண்டிராய்ட் மற்றும் ஐ ஃபோன்களில் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம்.

ரூபாய் நோட்டுக்களில் ஏதும் எழுதப்பட்டிருந்தால் அவை செல்லாத நோட்டுக்கள் எனவே கருதப்படும்.  அவற்றை எந்த வங்கியின் கிளைகளிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.