டில்லி:
அடுத்த ஆண்டு வர உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு தங்கள் மீதுள்ள அவதூறு வழக்குகளை பைசல் செய்ய ஆம்ஆத்மி முயற்சி எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஆத்ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவராக குமார் விஸ்வாஸ் மீது பாஜக அமைச்சர் அருண்ஜெட்லி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், குமார் பிஸ்வாஸ் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து, அவரை மன்னித்துவிட்டதாக அருண்ஜெட் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்மீதான அவதூறு வழக்கு வாபஸ் ஆனது.
இதன் காரணமாக ஆம்ஆத்மி கட்சி சற்று நிம்மதி அடைந்துள்ளது. கிரிக்கெட் சங்க தலைவராக அருண்ஜெட்லி இருந்த போது பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் 3 பேர் குற்றம் சாட்டினர். இவர்கள் 4 பேர் மீதும் அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்து,. ரூ.10 கோடி மானநஷ்ட ஈடும் கேட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஏற்கவே நடைபெற்ற விசாரணையின்போது, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைவரும் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
தற்போது குமார் விஸ்வாஸ் மன்னிப்பு கோரியதால், அவரை அருண்ஜெட்லி மன்னிப்பதாக நீதி மன்றத்தில் கூறியதை தொடர்ந்து அவர் மீதான வழக்கும் வாபஸ் ஆனது.