அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் டைரி திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருள்நிதி 15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய திரைப்படத்தை MNM பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அரவிந்த் சிங் தயாரித்திருந்தார்.

பிரபல யூட்யூப் சேனலான எரும சாணி யூடியூப் சேனலின் விஜய் குமார் ராஜேந்திரன் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகை அவந்திகா கதாநாயகியாக நடிக்க இசையமைப்பாளர் ரான் எதான் யோஹன் இசையமைக்கிறார்.

தற்போது இத்திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.